தமிழ் விவாதப் பயிற்சிப்பட்டறை
விவாதக்கலை ஒருவருக்கு தங்கள் கருத்துக்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் வெளிப்படுத்த கற்றுக்கொடுக்கிறது. அத்துடன், மற்றவர்களின் கருத்துக்களை கவனமாக கேட்கவும், அவற்றை புரிந்துகொள்ளவும் அது உதவுகிறது. சவாலான சூழ்நிலைகளில் வினைத்திறனாக எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் எதிர்ப்புகளை தைரியமாக எதிர்கொள்ளும் அதேவேளை தமது நிலைப்பாட்டை எப்படி தன்னம்பிக்கையுடன் முன்வைப்பது என்பதையும் ஒரு விவாதி கற்றுக் கொள்கின்றார்.
மொழி நடாத்தவுள்ள தமிழ் விவாதப் பயிற்சிப்பட்டறை 21.12.2023 அன்று இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.