தமிழும் கலையும் கல்வியும் உலகமெலாம்
கற்பதற்கு எதுவும் தடையாகக்கூடாது என்ற நன்னோக்கத்தில்
நவீன உலகிற்குத் தேவையான கற்கைகளை, தமிழில் வழங்குகின்றது மொழி.
கற்கைக்கான விடயப் பரப்புகள்
கலைகள்
பண்பாட்டின் சின்னமான கலைகளை சிறப்பாகப் பயிற்றுவிக்கும் வகுப்புகள்
முகாமைத்துவம்
வினைத்திறனான நிர்வாகம், நிதியியல், திட்டமிடல் சார்ந்த கற்கைகள்
தலைமைத்துவம்
அணியை திறம்பட வழிநடத்துவது தொடர்பான கற்கைகள்
தொழில்நுட்பம்
நவீனத் தொழில்நுட்பங்களை இலகுவாகக் கற்பிக்கும் பாடநெறிகள்
வடிவமைப்பு
வரைகலை முதலாக அனைத்துவகை வடிவமைப்புகளுக்குமான கற்கைகள்
தொழில்முனைவு
சொந்த வணிகமொன்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்கள்
டிஜிட்டல் சந்தைப்படுத்தல்
இணையத்தின் பயனாளர்களிடம் பொருட்களைச் சந்தைப்படுத்தும் உத்திகள்
ஊடகவியல்
தகவல்தொழில்நுட்ப யுகத்துக்கான புதிய ஊடகவியல் கற்கைகள்
Sessions
’தமிழில் கல்வி! தமிழில் கலைகள்!’ எனத் திரண்டெழுந்த அணியினர்.
அறிவியலின் கல்வி முதலாக அழகியலின் கல்வி வரை, அனைத்து அறிவுப்பரப்புகளையும் தமிழில் கிடைக்கச்செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தில், ‘மொழி’ இந்த தளத்தை உருவாக்கியுள்ளது. மரபு சார்ந்த கற்கைகளிலிருந்து நவீனத் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் வரை, அனைத்தையும் தமிழ் மொழியூடாக வழங்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.
இது நமது கனவு! உலகளாவிய தமிழ்பேசும் சமூகங்களை
இணைக்கின்ற தகவல்தொழில்நுட்பமும் பெருந்தொற்று முடக்கக் காலத்தில் இணையவழியூடான கற்றலுக்கு அனைவரும் இசைவடைந்துள்ள நிலையும் இந்த கனவு நனவாகுவதற்குத் துணைநிற்கின்றன. எமது பயணத்தில் இணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.
தரம்நிறைந்த கற்கைகள்! சிறப்பான கற்பித்தல்!
தனிநபருக்கான நிதி நிர்வாகம்
சுயபொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் இணையவழிக் கற்கைநெறி இன்றைய காலத்தில் உங்களின் வாழ்கையை நிதி நெருக்கடியின்றி திட்டமிட்டு வாழ்வது பற்றி மிகத் தெளிவாகக் கற்றுக்கொள்ள இக்கற்கை நெறி அறிமுகம்…
- 0 Lessons
விவாதி – [கற்கைநிலை I]
விவாதி - [கற்கைநிலை I] சிறுவர்களுக்கானது. விவாதக்கலையின் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றது. இலங்கை & இந்தியாவின் தமிழ் அறிஞர்களும் விவாத விற்பன்னர்களும் இணைந்து வழங்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது.
- 1 Lessons
விவாதி – [கற்கைநிலை II]
விவாதி - [கற்கைநிலை II] விவாதக்கலை தொடர்பாக ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்களுக்கானது. இது விவாதம் தொடர்பான ஒரு உயர்நிலைக் கற்கைநெறி. விவாதத்தின் நுட்பங்களை தெளிவுபடுத்தும் இந்தக் கற்கை, மாணவரை சிறந்த ஓர் ஆளுமையுள்ள நபராகவும்...
- 1 Lessons
விவாதி – [கற்கைநிலை I]
விவாதி - [கற்கைநிலை I] சிறுவர்களுக்கானது. விவாதக்கலையின் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றது. இலங்கை & இந்தியாவின் தமிழ் அறிஞர்களும் விவாத விற்பன்னர்களும் இணைந்து வழங்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது.
- 1 Lessons
விவாதி – [கற்கைநிலை II]
விவாதி - [கற்கைநிலை II] விவாதக்கலை தொடர்பாக ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்களுக்கானது. இது விவாதம் தொடர்பான ஒரு உயர்நிலைக் கற்கைநெறி. விவாதத்தின் நுட்பங்களை தெளிவுபடுத்தும் இந்தக் கற்கை, மாணவரை சிறந்த ஓர் ஆளுமையுள்ள நபராகவும்...
- 1 Lessons
இளம் பேச்சாளர்
இளம் பேச்சாளர் கற்கைநெறி, குழந்தைகளுக்கானது. அவர்களுக்கு பேச்சுக்கலையை அறிமுகம் செய்விப்பதோடு சிறப்பான பயிற்சிகளையும் வழங்குகிறது. கருத்துகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் திறமையை அளிக்கிறது.
- 1 Lessons
தலைமைத்துவப் பயிற்சி
இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறியானது, மாற்றத்தை அவர்களது மனதிலில் விதைக்கின்றது. அணியொன்றை வழிநடத்தலையும் உள்ளடக்கிய வினைத்திறனான பயிற்சி, சிறந்த வளவாளர்களால் வழங்கப்படுகின்றது.
- 0 Lessons
பேச்சாளர்
இக்கற்கைநெறியானது சிறந்த பேச்சாளர்களை உருவாக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டது. பேச்சுக்கலையின் நுட்பங்களை துல்லியமாகப் புரியவைக்கிறது. இலங்கை & இந்தியாவின் பிரபல பேச்சாளர்கள் இதனூடாக சிறப்பான பயிற்சியளிக்கின்றனர்.
- 1 Lessons
வருங்கால நிகழ்வுகள்
தலைமைத்துவப் பயிற்சி முகாம்
- 04.01.2024
- 07:00 AM
- Colombo, Srilanka
தமிழ் விவாதப் பயிற்சிப்பட்டறை
- 21.12.2023
- 09:00 PM
- கொழும்பு
Meet Our Members
மாணவர்களின் கருத்துகள்
நிரோஷன் பத்மநாதன்
மாணவர்“ மொழியின் கற்கைநெறிகள் சமகால தொழில்வாழ்வுக்கு வழிகாட்டுபவை. கற்பவரை மையமாகக் கொண்டு கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன."
மாதங்கி ஆரூரன்
வரைகலைஞர்“ இணையவழியூடாக வடிவமைப்பு பாடத்தைக் கற்பதற்கு மொழியைத் தெரிவு செய்தமை என்னுடைய மிகச் சிறந்த முடிவுகளில் ஒன்று"
நிகேஷ் நிமலப்பிரகாசன்
மாணவர்“ பெருந்தொற்று காலப்பகுதிக்கு பின்னரான இணையவழிக் கல்விச்சூழலில் பல கல்வித்தளங்கள் தொடங்கப்பட்டாலும், மிக உயர்ந்த தரத்தை முன்னிறுத்துவது மொழி மட்டுமே"
திறமையில் உயர்ந்த விற்பன்னர்கள் கற்பிக்கும் தரத்தில் உயர்ந்த கற்கைநெறிகள்!
நேரடியாக ஒருவரிடம் சென்று கற்கும் போது எத்தகைய தரமான கல்விச்சூழலும் அறிவும் பயிற்சியும் கிடைக்கின்றனவோ, அவை அத்தனையும் இணையவழிக் கற்கையிலும் கிடைக்க வேண்டும் என்று, மொழி உறுதி கொண்டுள்ளது. இந்த உறுதியே பிற கற்றல்தளங்களில் இருந்து மொழியை வித்தியாசமான தளமாக மாற்றுகிறது.
மாற்றத்தை உள்வாங்கல்
தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழில்துறைகளும் மாறுகின்றன. இதனை உன்னிப்பாக அவதானித்துவரும் மொழி, மாற்றமடையும் சூழலுக்கு அமைவாக தனது பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்திக் கொண்டேயுள்ளது.
தொழில்துறையுடனான தொடர்பு
மாணவர்களின் அறிவுவளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியத்துவம் தொழில்துறையுடனான நேரடித் தொடர்புக்கும் வழங்கப்பட வேண்டும். மொழியின் அனைத்துக் கற்கைநெறிகளும் அவை சார்ந்த தொழில்துறைகளின் விற்பன்னர்களாலேயே கற்பிக்கப்படுகின்றன.