எளிமையாக வாழ்!!
-சஸ்மிதா இளஞ்செழியன்-
தற்காலத்தில் காசு பணம் இருந்தும் யாருக்கும் உதவாமல், தனது பணத்தை எப்படியாவது அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ தான் ஆசைப்பட்டார்கள் அதனால் தான் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
ஒரு நாள் மும்பையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் எல்லா பயணிகளும் ஏறி தங்களின் இருக்கைகளில் அமர்ந்த பின் பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பட்சன் அவர்கள் அந்த விமானத்தில் வந்து ஏறுகிறார். அனைவரும் அவரை கண்டதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், ஒரு யன்னலோரத்து இருக்கையில் இருந்த ஒரு நபர் மட்டும் திரும்பி கூட பார்க்காது இருக்கிறார். பார்பதற்கு சாதாரண மிடில் கிளாஷ் போல தெரிகிறார், அமிதாப் பட்சன் அதை கவனித்துவிட்டு தனது இருக்கையில் அமர்கிறார்.
விமானம் தரையிரங்கியது. அனைவரும் விமானத்தை விட்டு இறங்குகின்றனர். அமிதாப் பட்சன் அந்த நபரின் அருகே சென்று ” அய்யா வணக்கம், நீங்கள் சினிமா பார்ப்பீர்களா? ” எனக் கேட்டார். ” பெரிதாக பார்பதில்லை ” என அந்த நபரும் பதில் கூறினார். “என்னை கண்டுள்ளீர்களா?” என அமிதாப் பட்சன் கேட்டர். “இல்லை ” என அந்த நபர் பதில் கூறினார். அப்போது அமிதாப் பட்சன்,” நான் தான் அமிதாப் பட்சன் ஹிந்தி நடிகர்” என்றார். பதிலுக்கு அந்த நபர்,” ஹா , நான் தான் டாடா இன்டஷ்ட்ரியின் ஸ்தாபகர் ரத்தன் டாடா” எனக்கூறி விமானத்திலிருந்து இறங்கி சென்றார். அமிதாம் பட்சன் பெரிதும் ஆச்சர்யப்பட்டார்.
இது போல எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள் எப்போதும் உயரம் சென்றுக்கொண்டே இருப்பார்கள். எனவே எளிமையாக வாழ பழகுவோம்.