எண்ணம் தான் வாழ்க்கை.
-சஸ்மிதா இளஞ்செழியன்-
ஒவ்வொரு மனிதனும் மாறுபட்ட கோணத்தில் தான் தனது எண்ணங்களை கையாளுவான். தனது வருமானம்,சவால்கள்,விருப்பு வெறுப்பு என எல்லாவற்றையும் கொண்டுதான் தனது எண்ணங்களை நிறைவேற்றுகிறான்.
வர்த்தகர்களின் ஒன்று கூடுதல் ஒன்றில் உலகிலுள்ள பல வர்த்தகர்கள் சமூகமளித்திருந்தனர். அவர்களை பேட்டி எடுக்க பல ஊடகவியலாளர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
ஊடகவியலாளர் ஒருவர்,வர்த்தகர்களைப் பார்த்து ஒரு கேள்வியை முன்வைத்தார்.
“சார், உங்களுக்கு ஒரு ஆப்பிள் வாங்குவதற்கு எத்தனை நாட்க்கள் எடுக்கும்?” என அந்த ஊடகவியலாளர் கேட்டார்..
சபையிலுள்ள அனைவரும் தத்தமது பதில்களை கூறினார்கள்.
ஒரு வர்த்தகர் 1 நாள் போதும் என்றார். இன்னொருவர் 1 வாரம் போதும் என்றார். சபையிலிருந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் 3 மாதம் வேண்டும் என்றார். இன்னொருவர் 1 வருடம் தேவை என்றார். இவ்வாறு பலரும் பல பதில்களை வழங்க பிரபல வர்த்தகரான ரத்தன் டாட்டாவிடம் ஊடகவியலாளரின் பார்வை திரும்பியது.
சார், நீங்கள் கூறுங்கள் ஒரு ஆப்பிள் வாங்க எத்தனை நாட்கள் உங்களுக்கு தேவை?? என ரத்தன் டாட்டாவை பார்த்து கேட்டார்.
ரத்தன் டாட்டா சிறிது சிந்தித்துவிட்டு, “எனக்கு ஒரு 5 வருடங்கள் ஆகும் ” என்றார்.
அந்த பதிலைக் கேட்ட முழு சபையும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது.
அந்த ஊடகவியலாளர் கேட்டார்,” உங்களிடம் உள்ள பணத்தால் இன்றே வாங்கிடலாமே ஏன் 5 வருடம் தேவை?” என கேட்டர்.
அதற்கு ரத்தன் டாட்டா கூறிய பதில் அனைவரையும் ஈர்த்தது…. அவர் கூறினார்,” எனக்கு முழு ஆப்பிள் கம்பனியையும் வாங்க கிட்டத்தட்ட 5 வருடம் வேண்டும் ” என்றார்.
முழு அரங்கமும் கைத்தட்டி அவரின் பதிலை வரவேற்றது. ஏனெனில், மற்றவர்கள் அனைவரும் ஆப்பிள் புதிதாக வெளியிட்ட கையடக்க தொலைப்பேசியை வாங்க எண்ணினார்கள். ஆனால், ரத்தன் டாட்டாவோ ஆப்பிள் கம்பனியை வாங்க எண்ணினார்.
அதாவது, எப்போதும் எமது இலக்கை பெரிதாக திட்டமிட வேண்டும். நம்மால் முடியுமா முடியாதா என்பது இரண்டாவது, முதலில் நமது எண்ணங்களை சிறந்ததாக கையாள வேண்டும்.