யார் சிறந்தவர்??
-சஸ்மிதா இளஞ்செழியன்-
பண்டையகால மக்களிடையே பாகுபட்டை அடிப்படையாக கொண்ட வாழ்க்கைமுறை ஒன்று தான் காணப்பட்டது. அதாவது வர்க்கம், வர்க்க வேறுபாடு அந்த நாட்களில் அதிகமாகவே காணப்பட்டது. அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது.
யார் பெரியவர்?? யார் சிறியவர்?? என்று வரையறைப்படுத்த நாம் யார்? இதை கூறினால் யார் தான் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள்??
சிந்தித்துப் பாருங்கள், உங்களில் பலரும் வர்க்க வேறுபாட்டில் சிக்கி இருப்பீர்கள். ஒரு வீட்டில் தான் இது ஆரம்பமாகிறது, பெரிய மகனுகே முதலுரிமை என பாகுபாடு பார்க்கிறோம். என்னிடம் விலை உயர்ந்த பேனை உள்ளது உன்னிடம் இல்லை என நன்பனோடு பாகுபாடு பார்க்கிறோம். நான் முதலாளி நீ பணி புரிபவன் என அங்கும் ஒரு வேறுபாடு. பணம் இருப்பவன், இல்லாதவன். நல்லவன்,கெட்டவன். இதற்கு முடிவே இல்லையா?
ஒரு சவர்க்காரம் உற்பத்தி செய்யும் கம்பனியில் பிரச்சனையை ஒன்றை பற்றி கலந்துரையாட அந்த கம்பனியின் தலைவர் அனைவரையும் ஒன்றினைத்து கூட்டமொன்றை ஏற்பாடு செய்கிறார்.
அந்த கூட்டத்தில் கம்பனில் பணிபுரியும் அனைவரும் கலந்துக்கொள்கின்றனர். தலைவர் பேச ஆரம்பிக்கிறார், ” நம்முடைய கம்பனியில் சவர்க்காரம் உள்ளிடாத வெறும் கவர்கள் அதிகமாக விற்பனை தளங்களிற்கு செல்கின்றன.இது ஊழியர்களின் பிழையா அல்லது இயந்திரப் பிழையா என்பது தெரியாது, இதனால் எமக்கு நிறைய நட்டமும் ஆகிறது. நமது பெயரும் கெடுகிறது. இதற்கு தீர்வு காண உங்களின் யோசனைகளை இப்போது பகிருங்கள். இதற்காக தான் இந்தக் கூட்டத்தை கூட்டியுள்ளேன். ” என்றார்.
கூட்டத்தில் பலரும் பல யோசனைகளை முன் வைத்தனர். ஒருவர், அதற்கு ஒருவரை நியமிப்போம் என்றார். இன்னொருவர், இயந்திரத்தை மாற்றுவோம் என்றார். இப்படி பல கருத்துக்கள் வந்த போதும் தலைவர் திருப்தியடையவில்லை. அப்போது அந்த கூட்டத்திலுள்ளவர்களுக்கு தேனீர் கொடுக்க வந்த சாதாராண நபர் “அய்யா, நான் ஒரு யோசனை சொல்லவா?” என கேட்டார். அனைவரும் நகைத்தனர். “சாதாரண டீ கடை வைத்திருக்கும் உனக்கு வியாபாரம் பற்றி என்ன தெரியும், பேசாமல் வந்த வேலையை முடித்து விட்டு வெளியே போ” என அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறினார்.
அப்போது அந்த நபரும் வெளியே செல்லும் போது தலைவர் “சரி சொல்! என்ன யோசனை ?” என கேட்டார். “அய்யா, சவர்க்கார உரைக்குள் சவர்காரம் இட்டு வெளியே வரும் இடத்திலொரு மின் விசிறியை வையுங்கள், வெறும் உரை காற்றில் பறக்கும் சவர்க்காரம் இருந்தால் பறக்காது” என்றார். அனைவரும் திகைத்தனர்.
இப்போது சொல்லுங்கள், நீங்கள் அந்த சபையில் இருந்திருந்தாலும் இப்படி தான் திகைத்திருப்பீர்கள். ஏனெனின், நாம் எல்லோரையும் வேறுபடுத்தி பார்க்கிறோம். தோற்றத்தை வைத்தோ, சூழ்நிலையை வைத்தோ ஒருவரை நாம் வேறுபடுத்தவோ மட்டம் தட்டவோ கூடாது.